
“மன்னர் அப்டேட்டா சிந்திக்கிறாரா?”
“ஆமா. போரில் புறமுதுகிட்டு ஓடிவருவதை ‘ரோடு ஷோ’ன்னு அழைக்கும்படி உத்தரவு போட்டுட்டார்!”
- எஸ்.முகம்மது யூசுப்

“ஞாபகமறதிக்குத்தான் மருந்து குடுத்தேனே, மறுபடியும் ஏன் வந்து நிக்கிறீங்க?”
“ஒரு நாளைக்கு எத்தனை வேளை சாப்பிடணும்னு நீங்க சொன்னதை மறந்துட்டேன் டாக்டர்!”
- எம்.ஏ.ஆதம்

“தலைவரோட பேச்சுல எப்பவும் ரெண்டு விஷயத்துக்கு நடுவுலதான் போட்டியே!”
“அடடே... எந்த ரெண்டைச் சொல்ற?”
“ஒண்ணு உளறல்; இன்னொண்ணு உதறல்!”
- சு.அருண் பிரகாஷ்

“இடைத்தேர்தல்ல நின்னு என்ன தெரிஞ்சுக்கிட்டீங்க?”
“அரசியல்வாதிகளோட பட்டப்பெயரெல்லாம் தெரிஞ்சுக்கிட்டேன்!”
- கி.பாலமுருகன்
from Vikatan Latest news https://ift.tt/hv8Y4ME
0 Comments