கால்பந்து போட்டி சென்னை வானகரத்தில் அமைந்துள்ள வேதாந்தா அகாடமி பள்ளியில் நடைபெற்றது.

 

சென்னை ஸ்போர்ட்டனா அகாடமி மற்றும் அகில இந்திய மனிதவள மேம்பாட்டு ‌கழகம் இணைந்து 16 மற்றும் 13 வயதுடையோருக்கான கால்பந்து போட்டியை சென்னை வானகரத்தில் அமைந்துள்ள வேதாந்தா அகாடமி பள்ளியில் நடைபெற்றது.


இப்போட்டியில் 13 வயதுக்கு உட்பட்ட பிரிவில் கிரேஸ் யுனிபைடு அணி வெற்றி கோப்பையையும்,. A. J. Poul அணி இரண்டாம் இடம் பிடித்து வெற்றி கோப்பையையும் தட்டிச் சென்றது.


இப்போட்டியில் 16 வயதுக்குட்பட்ட போட்டியில் புழல் கால்பந்து அணி முதல் இடம் பிடித்து வெற்றி கோப்பையை வென்றது.  MGR Adarsh பள்ளி அணி இரண்டாம் இடம் பிடித்து வெற்றி கோப்பையை வென்றது.


இப்போட்டியின் பரிசளிப்பு விழாவில் அகில இந்திய மனிதவள மேம்பாட்டு கழக தலைவர் திரு. முத்துராமன் சிங்கப்பெருமாள் அவர்கள் பங்கேற்று மாணவர்களுக்கு வெற்றி கோப்பையை வழங்கி கெளரவித்தார்கள்.

Post a Comment

0 Comments