https://gumlet.assettype.com/vikatan/2021-12/1fd43cef-cf1f-4375-9654-26e8927a2768/AP21357714651541.jpgஉச்சத்தில் ரஷ்யா - உக்ரைன் விவகாரம்: அகதிகளை ஏற்க முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்திய போலந்து அரசு!

ரஷ்யா - உக்ரைன் நாடுகள் இடையே அதிகரித்து வரும் போர்ச்சூழல் நாளுக்கு நாள் உலக நாடுகள் மத்தியில் பேரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முன்னதாக அமெரிக்கா தரப்பிலிருந்து உக்ரைனுக்கு ஆதரவாக, ரஷ்யாவை எச்சரித்தும் ரஷ்யா பின்வாங்குவதாக இல்லை. இதையடுத்து கடந்த சில நாள்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், உக்ரைனில் வசித்துவரும் அமெரிக்கர்களை உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறுமாறு கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும், உக்ரைனில் வசிக்கின்ற தங்கள் நாட்டு மக்களை அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறிவருகின்றன. மேலும் உக்ரைனில் உள்ள பல தூதரகங்களும் போர்ச்சூழல் காரணமாக மூடப்பட்டு வருகின்றன.

உக்ரைன் ராணுவம்

இந்த நிலையில், ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் மூண்டால் அகதிகளாக்கப்படும் மக்களை ஏற்பதற்கான முன்னேற்பாடுகளை போலந்து அரசு மேற்கொண்டுவருவதாக போலந்து துணை வெளியுறவுத்துறை அமைச்சர் மார்ஸின் பிரசிடாக்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் இதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் முன்னேற்பாடு திட்டங்களை போலந்து உள்துறை அமைச்சகம் பல வாரங்களுக்கு முன்பே தொடங்கி செயல்பட்டு வருகிறது எனவும் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் மார்ஸின் பிரசிடாக்ஸ் கூறியிருந்தார். அமெரிக்காவும் தனது படை வீரர்கள் மூலம் அகதிகளுக்காக போலாந்து அரசுக்கு உதவ உள்ளதாக பென்டகனின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

Also Read: ரஷ்யா - உக்ரைன் போர் பதற்றம்: வீழ்ச்சியில் பங்குச்சந்தை; உயரும் தங்கம் விலை!



from Latest News

Post a Comment

0 Comments