இந்தியாவில் கொரோனா 3 வது அலை பல மாநிலங்களில் மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் போர்க்கால அடிப்படையில் செலுத்தப்பட்டு வருகின்றன.
15 வயதிற்கு மேற்பட்ட இந்திய குடிமகன் அனைவருக்கும் தடுப்பூசி 2 டோஸ்கள் செலுத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே தடுப்பூசி செலுத்த முடியும் என்ற நிலை தற்போது வரை இருந்து வருகிறது.
இதனால் ஆதார் அடையாள அட்டை பெறாத பலர் தடுப்பூசி செலுத்தாமல் அவதிப்படும் நிலையும், நோயால் பாதிக்கப்படும் அபாயமும் நிலவி வருகிறது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநலவழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் கொரோனா தடுப்பூசி செலுத்த கொரோனா கட்டாயமில்லை எனத் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தற்போது ஆதார் அடையாள அட்டை இல்லாமல் 87 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களை ஆதார் கொண்டுவரச் சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் இல்லாதவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் அத்தியாவசிய சேவைகள், பலன்கள் கிடைக்கவேண்டும் எனவும் மத்திய அரசு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளவும் ஆதார் தேவையில்லை.அ அதற்கு பதிலாக மாற்று 9 வகையான ஆவணங்களை தாக்கல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளவும் ஆதார் தேவையில்லை.அ அதற்கு பதிலாக மாற்று 9 வகையான ஆவணங்களை தாக்கல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments