பெட்ரோல், டீசல் வாகனங்களை மக்கள் ஓட்டவே கூடாது.

 பெட்ரோல், டீசல் வாகனங்களை மக்கள் ஓட்டவே கூடாது... அதிரடி திட்டத்தை அறிவித்த மத்திய அரசு... என்னனு தெரியுமா?


பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைப்பதற்காக மத்திய அரசு அதிரடி திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காற்று மாசுபாடு பிரச்னைக்கு பெட்ரோல், டீசல் வாகனங்கள் முக்கியமான காரணமாக உள்ளதால், அவற்றுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்கும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது

மக்கள் அதிகளவில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் கூட எலெக்ட்ரிக் வாகனங்கள் தொடர்பாக ஒரு சில அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி ஸ்வாப்பிங் கொள்கை (Battery Swapping Policy) தொடர்பான அறிவிப்பை இதற்கு ஒரு உதாரணமாக கூறலாம். இதுதவிர இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்ட அல்லது தடை செய்யப்பட்ட மண்டலங்கள் (Restricted Zones) அமைக்கப்படும் எனவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இந்த மண்டலங்களில் ஐசிஇ வாகனங்கள் (ICE Vehicles) அனுமதிக்கப்படாது. வழக்கமான பெட்ரோல், டீசல் இன்ஜின்களில் இயங்கும் வாகனங்கள்தான் ஐசிஇ வாகனங்கள் ஆகும். எனவே இந்த மண்டலங்களில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படாது. இந்த சிறப்பு மொபிலிட்டி மண்டலங்கள் (Special Mobility Zones) எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக அமைக்கப்படுகின்றன.

எனவே இங்கு பெட்ரோல், டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டம் எப்போது அமலுக்கு கொண்டு வரப்படும்? என்பது உறுதியாக தெரியவில்லை. இந்த திட்டம் தொடர்பாக கூடுதல் தகவல்களை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை நாம் காத்திருக்க வேண்டும்.

பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைப்பதற்காக மத்திய அரசு இதுபோல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சரான நிதின் கட்காரி, பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக, மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களுக்கு மக்கள் மாற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களை அதிகளவில் தயாரிக்க வேண்டும் என ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளின் பலனாக இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை போல் சிஎன்ஜி வாகனங்களும் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன.

டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தின் டியாகோ சிஎன்ஜி மற்றும் டிகோர் சிஎன்ஜி என 2 சிஎன்ஜி கார்கள் வெகு சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அந்த கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், வரும் காலங்களில் இன்னும் நிறைய சிஎன்ஜி கார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளன.

மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வரும் அதே நேரத்தில், பெட்ரோலுடன் கலக்கப்படும் எத்தனாலின் அளவையும் மத்திய அரசு படிப்படியாக அதிகரிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. காற்று மாசுபாடு மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதுதான் இவை அனைத்திற்கும் காரணம்.

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு கடுமையாக உயர்த்துவதும் கூட, மக்களை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற வைக்கும் ஒரு முயற்சிதான் என பலரும் கூறுகின்றனர். ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை? என தெரியவில்லை. எது எப்படியோ வரும் காலத்தில் இந்தியர்களின் பயணம் எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிபொருள் வாகனங்களை சார்ந்துதான் இருக்கும் என்பது உறுதி.


Post a Comment

0 Comments