முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி பிரசாரம் 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: பிப்.6-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி பிரசாரம் தொடக்கம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி பிரசாரம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி பிரசாரம் 


சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 6-ந் தேதி முதல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் பிரசாரம் செய்கிறார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைந்தது.

இதனைத் தொடர்ந்து வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரத்தை வேட்பாளர்கள் தொடங்கி நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் களம் காணும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிப்ரவரி 6-ந் தேதி முதல் காணொலி மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார். உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி என்ற முழக்கத்துடன் இந்த காணொலி பிரசாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்கிறார்.

பிப்ரவரி 6-ல் கோவை, பிப்.7-ல் சேலம், பிப்.8-ல் கடலூர், பிப். 9-ல் தூத்துக்குடி, பிப்.10-ல் ஈரோடு, பிப்.11-ல் கன்னியாகுமரி, பிப்.12-ல் திருப்பூர், பிப்.13-ல் திண்டுக்கல், பிப்.14-ல் மதுரை, பிப்.15-ல் தஞ்சை, பிப்.16-ல் திருநெல்வேலி மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வழி பிரசாரம் செய்கிறார்.

Post a Comment

0 Comments