உக்ரைன் விவகாரம்: ``அமெரிக்கா, நேட்டோ நாடுகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்!” - ரஷ்ய அதிபர் புதின்

ரஷ்யா - உக்ரைன் விவகாரமானது, உலக அளவில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அதிகரித்து வரும் போர்ச்சூழல் காரணமாக, அமெரிக்கா, இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் உக்ரைனில் வசித்துவரும் தங்கள் நாட்டு மக்களை உக்ரைனை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தி வருகின்றன. பல நாடுகள் உக்ரைனில் உள்ள தங்கள் நட்டு தூதரகங்களையும் மூடிவருகின்றன. இந்த நிலையில், ரஷ்யா உக்ரைன் நாட்டு எல்லையில் குவித்து வைத்திருந்த 1.3 லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களில் சில குழுவினரை தங்கள் நாட்டு முகாம்களுக்கே திருப்பி அழைத்துக் கொண்டது.

அமெரிக்க அதிபர் பைடன் - ரஷ்ய அதிபர் புதின்

இதுகுறித்து ரஷ்யா, `ராணுவ வீரர்களின் பயிற்சி முடிந்ததால் வீரர்களை முகாம்களுக்கு திருப்பியனுப்பினோம்’ என அறிவித்திருந்தது. இதையடுத்து தற்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ``உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா, நேட்டோ நாடுகளுடன் நம்பிக்கையூட்டும் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயார்" என கூறியுள்ளார். மேலும் ரஷ்யா போரை விரும்பவில்லை என்றும் விளாடிமிர் புதின் தெரிவித்திருந்தார்.



from Latest News

Post a Comment

0 Comments