முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது 69-வது பிறந்தநாளை ஒட்டி சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்று முதலமைச்சர் மலரஞ்சலி செலுத்தினார். இவரின் பிறந்த நாளுக்கு அனைத்து கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நீங்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியதற்க்கு, ``தங்கள் ஒத்துழைப்புடன் நான் தொடர்ந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைப்பேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.
"எதிர்ப்போர் கருத்துக்கும் இடமளித்து, தன் எண்ணத்துக்கும் செயலுக்கும் வலு கூட்டிச் செயல்படும் அவருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்து. நீடு வாழ்க" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"வரலாற்றுச் சிறப்புமிக்க கேரள-தமிழக உறவினை மேலும் வலுப்படுத்தவும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதியளித்திருக்கும் உயர்ந்த கொள்கைகளுக்காக அவர் தொடர்ந்து போராடவும் வாழ்த்துகிறேன்" என மு.க.ஸ்டாலினுக்கு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
``இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்'' என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
``பெரியார்-அண்ணா-கலைஞர் உள்ளிட்ட முன்னோடிகள் விட்டுச் சென்ற சமூக நீதிப் பாதையில், கழகத்தையும் தமிழகத்தையும் வழிநடத்திச்செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என திமுக எம்பி கனிமொழி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
from Latest News https://ift.tt/vKRoBSO
0 Comments