https://gumlet.assettype.com/vikatan/2022-02/1b99edd9-2e3a-4194-b93e-f4a025a320ba/AP22055708052119.jpgஉக்ரைன் தலைநகர் கீவ்-க்கு 25 கி.மீ... 60 கி.மீ நீளம் கொண்ட பெரும் படையுடன் நெருங்கும் ரஷ்யா!

உக்ரைனில் தொடர்ந்து ஆறாவது நாளாக போர் நடைபெற்று வருகிறது. போருக்கு மத்தியில் உக்ரைனில் வாழும் பல்வேறு நாட்டு மக்களும் போலந்து, ஹங்கேரி மற்றும் ருமேனியாவிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர். இப்படி நாளுக்கு நாள் இன்னும் அதிகமாக போர் தீவிரமடைந்து வரும் நிலையில் போரின் தீவிரத்தை வெளிக்காட்டும் விதமாக, மாக்ஸர் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட செயற்கைக்கோள் படங்கள் சில வெளியிட்டுள்ளது.

உக்ரைன் ரஷ்யா போர்

அந்த படங்கள், உக்ரைனின் அன்டோனோவ் விமான நிலையத்திலிருந்து 60 கி.மீ தொலைவுக்கு ரஷ்ய படைகள் போர் ஆயுதங்கள் மற்றும் ராணுவ வாகனங்களுடன் 40 கி.மீ தூரத்திற்கு தொடர்ச்சியாக அணிவகுத்திருப்பது காட்டுகிறது. மேலும் ரஷ்ய படைகள் அணிவகுத்திருக்கும் சாலைகளில் உள்ள கட்டடங்கள் பெரும்பாலிம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பது போன்றும் தெரிகிறது. இதுமட்டுமல்லாமல், ஏற்கெனவே பலநூறு உயிரிழப்புகளை கண்டுகொண்டிருக்கும் இந்த போர், இப்படி 25 கி.மீ தூரத்தில் பெரும் படையுடன் ரஷ்யா நெருங்கிக்கொண்டிருப்பது இன்னும் கூடுதல் அச்சத்தையே ஏற்படுத்தியுள்ளது.

நேற்று பெலாரஸில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த சூழலில் நேட்டோ அமைப்பு, உக்ரைனுக்கு உதவுவதாக நேற்று அறிவித்தது. இது ரஷ்யாவை மேலும் கொதிப்படையை செய்தது. நேட்டோவின் இந்த முடிவானது மோசமான விளைவை ஏற்படுத்தும் என ரஷ்யா நேற்று கருத்து தெரிவித்திருந்தது! இந்த சூழ்நிலையில் ரஷ்யா பெரும் படையுடன் உக்ரைன் தலைநகரை நோக்கி நகர்வது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது!



from Latest News https://ift.tt/1AUDgQz

Post a Comment

0 Comments