தமிழ்நாட்டில் நர்சரி, மழலையர் பள்ளிகள் இன்று திறப்பு

கொரோனா காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த நர்சரி, மழலையர் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன.

நாடு முழுவதும் கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் பரவிய கொரோனா மூன்றாம் அலை, டிசம்பர் மத்தியில் இருந்து கணிசமாக குறைந்து வருகிறது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு அடுத்தடுத்து பல பொதுமுடக்க தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி, நர்சரி பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன. பொருட்காட்சிகள் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

image

திரையரங்குகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், அழகு நிலையங்கள் ஆகியவையும் 100 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சமுதாய, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு உள்ள தடை தொடர்கிறது.

image

மேலும், திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 200 பேர்களுக்கு மிகாமலும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமலும் பங்கேற் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments