சென்னை பெரம்பூர், மதுரைசாமி மடம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் ராமசந்திரன். இவரின் மனைவி துர்காதேவி (52). இவர் கடந்த 25.3.2014-ம் தேதி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த கார்த்திக் (24), ஓட்டேரியைச் சேர்ந்த கிருஷ்ணாயில் கார்த்தி (23) ஆகிய இருவரும் துர்காதேவியை கொலை செய்து விட்டு அவர் அணிந்திருந்த 10 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டுச் சென்றனர்.
இதுகுறித்து திரு.வி.க.நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து கார்த்திக், கிருஷ்ணாயில் கார்த்தி ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை அல்லிகுள வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தும் முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தியும் வழக்கு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக கண்காணித்தும் வந்தனர். இந்த வழக்கில் 3.3.2022-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் எதிரிகள் இருவர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கார்த்திக், கிருஷ்ணாயில் கார்த்தி ஆகியோருக்கு 302 சட்ட பிரிவின் கீழ் ஆயுள் தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும் 380 சட்டப்பிரிவின்கீழ் 7 ஆண்டுகள் சிறையும் 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படடது. இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்து எதிரிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த திருவிகநகர் காவல் குழுவினரை போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.
from Latest News https://ift.tt/OfJBWIv
0 Comments