`புதிய டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை இனி மக்களே தடுக்கலாம்!' - எப்படி?

டாஸ்மாக் கடைகள் புதிதாக ஓரிடத்தில் திறக்கப்பட்ட பின்னர், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், பொது மக்களுக்கும், சாலைப் போக்குவரத்துக்கும் இடையூறாக அமைந்து விடுவதுண்டு. அதன் பிறகு அந்த டாஸ்மாக் கடைகளை மூடச்சொல்லி பல போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த நிலையை மாற்றும் வகையில், மக்கள் நினைத்தால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதைத் தடுக்கலாம் என தமிழக அரசு சட்ட திருத்தத்தை அறிவித்துள்ளது.

டாஸ்மாக்

அதன் படி, டாஸ்மாக் கடைகள் அமைக்கப்படும்போது, பொது மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில், அதனை மாவட்ட ஆட்சியர் கண்டிப்பாக பரிசீலிக்க வேண்டும். மக்கள் முன்வைக்கும் ஆட்சேபங்களையும், கருத்துகளையும் தீர ஆராய்ந்த பின்னரே டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்.

இதற்கிடையில் உத்தரவு பிறப்பிக்கப்படாமல் எந்த டாஸ்மாக் கடையையும் திறக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என தமிழக அரசு சட்டவிதிகளில் திருத்தம் செய்திருக்கிறது.

மாவட்ட ஆட்சியரின் முடிவை எதிர்ப்பவர்கள், மது விலக்கு ஆயத்தீர்வை ஆணையருக்கு 30 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்யவும் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

டாஸ்மாக் முற்றுகைப் போராட்டம்

இனிமேல் புதிதாகத் திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள் மக்களுக்கு இடையூறு தரும் வகையில் இருந்தால், மக்களே அதைத் தடுக்கலாம் என்ற இந்த சட்ட திருத்தம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.



from Latest News https://ift.tt/JvUpfsa

Post a Comment

0 Comments