23 வயதான கிரெட்டா வெட்லர் ஓர் ரஷ்ய மாடல். இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு சமூக வலைதளங்களில் ரஷ்ய அதிபரை புதினை `மன நலம் பாதிக்கப்பட்டவர்’ என விமர்சித்திருந்தார். ஆனால் அதற்குப் பின் வெகு நாள்களுக்கு சமூக வலைத்தளங்களில் சத்தமே இல்லாமல் போனார். இந்த நிலையில், கிரெட்டா வெட்லர் தற்போது சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதை கிரெட்டா வெட்லரின் முன்னாள் காதலர் டிமிட்ரி கொரோவின், `நான் தான் கிரெட்டா வெட்லரை கழுத்தை நெரித்து கொலை செய்தேன்’ என ஒப்புக்கொண்டதாக டெய்லி ஸ்டார் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், கிரெட்டா வெட்லரை கழுத்தை நெரித்து கொன்றதாகவும், பின்னர் அவளின் சடலத்தை ஒரு சூட்கேஸில் அடைத்துவைத்து, அதனுடன் 3 நாட்கள் தங்கியிருந்ததாகவும் அதிகாரிகளிடத்தில் கூறியுள்ளார். மேலும், கிரெட்டா வெட்லர் இறந்தது தெரியக்கூடாது என்பதற்காக கிரெட்டா வெட்லரின் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்ததாகவும், அதிகாரிகளிடத்தில் டிமிட்ரி கொரோவின் கூறியிருக்கிறார்.
from Latest News https://ift.tt/rzJegYu
0 Comments