2014-ல் ரஷ்யா, கிரிமியா பகுதியைத் தன்னோடு இணைத்துக் கொண்டது. இதையடுத்து இதன் 8-வது ஆண்டின் நிறைவைக் குறிக்கும் வகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின். அந்நிகழ்ச்சியில் அவர் அணிந்திருந்த விலையுயர்ந்த ஜாக்கெட் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.
புதின் அணிந்திருந்த இத்தாலிய பிராண்ட் லோரோ பியானாவின் ஜாக்கெட்டின் மதிப்பு சுமார் 10 ஆயிரம் யூரோ அதாவது தற்போதைய இந்திய மதிப்பில் ஏறக்குறைய 8 லட்சம். இது ரஷ்ய குடிமக்களின் சராசரி ஆண்டு வருமானத்தில் பாதி என்றும் உக்ரைன்- ரஷ்யா இடையே போர் நடந்து வரும் சூழலில் நாட்டின் பொருளாதாரம் பாதிப்படைந்து வருகிறது. இந்த சமயத்தில் புதின் இப்படி நடந்து கொள்வது தவறு என்றும் சமூக வலைத்தளங்களில் உரையாடி வருகின்றனர்.
மேலும் உக்ரைன்- ரஷ்யா போர் பற்றிப் பேசிய புதின், ரஷ்ய இராணுவ வீரர்களை புகழ்ந்து பேசினார்.’தோளோடு தோள் சேர்ந்து, ஒருவருக்கொருவர் உதவுகிறார்கள், ஒருவரையொருவர் ஆதரிக்கிறார்கள், தேவைப்படும்போது அவர்கள் சகோதரர்களைப் போல தங்கள் உடல் கொண்டு தோட்டாக்களிலிருந்து ஒருவரையொருவர் பாதுகாக்கிறார்கள்’ என்று கூறினார். மேலும் ‘இத்தகைய ஒற்றுமை எங்களுக்கு நீண்ட காலமாக இல்லை.’ என்றும் கூறியிருந்தார்.
from Latest News https://ift.tt/IH5KEaR
0 Comments