Doctor Vikatan: உப்புத் தண்ணீரில் தலை குளிப்பதால் முடி உதிர்வு; தீர்வு என்ன?

போர்வெல் தண்ணீரில் குளிப்பதால் சருமமும் கூந்தலும் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? சம்ப்பில் தண்ணீரைச் சேமித்து, அதில் வெட்டிவேர் போட்டுவைத்து இரண்டு நாள்கள் கழித்து உபயோகிக்கச் சொல்கிறார்கள் சிலர். அது உதவுமா? வேறு தீர்வுகள் உண்டா?

- சரவணகுமார் (விகடன் இணையத்திலிருந்து)

ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்.

``குளிப்பதற்கு எல்லோருக்கும் நல்ல தண்ணீர் கிடைப்பதென்பது சென்னை போன்ற நகரங்களில் சாத்தியமில்லை. இந்தப் பிரச்னை குறித்து என்னிடம் கேட்போருக்கு நான் சொல்லும் சிம்பிள் அட்வைஸ் ஒன்றுதான்.

போர்வெல் தண்ணீரோ, உப்பு கலந்த தண்ணீரோ.... அதிலேயே உடலுக்கும் தலைக்கும் குளிக்கலாம். ஆனால் கடைசியில் இரண்டு மக் நல்ல தண்ணீரால் (குடிப்பதற்கு நாம் பயன்படுத்தும் நீர்) தலையை அலசுவதன் மூலம், உப்புத் தண்ணீரால் படிந்த படிமங்கள் வெளியேறிவிடும்.

Bath

ஒரு டேபிள்ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை ஒரு மக் நல்ல தண்ணீரில் கலந்து, கடைசியாக தலையை அலசப் பயன்படுத்தலாம். அதை அப்படியே விட்டுவிட வேண்டும். அதன் மேல் நிறைய தண்ணீர்விட்டு அலச வேண்டாம். இப்படிச் செய்வதும் உப்புத் தண்ணீரால் ஏற்படும் முடி உதிர்வுக்குத் தீர்வு தரும்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


from Latest News https://ift.tt/JFuNMrW

Post a Comment

0 Comments