நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகாரளித்துள்ளார். இந்த பெண்மணி இந்தியாவை சுற்றி பார்ப்பதற்காக தன் குடும்பத்தினருடன் வந்திருந்தார். இவர்கள் மார்ச் 12 ஆம் தேதி டெல்லி வந்துள்ளனர்.
சுற்றுலாவின் ஒரு பகுதியாக ஜெய்ப்பூரில் உள்ள சிந்தி கேம்ப் பகுதியில் இருந்த ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். இந்நிலையில் ஆயுர்வேத முறையில் மசாஜ் செய்வதற்காக பிஜூ முரளிதரன் என்ற நபரை அழைத்துள்ளனர். இந்த நிலையில் அவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி அந்தப் பெண்மணி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்த பெண்மணியின் புகாரின் படி இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை அன்று நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட பிஜூ முரளிதரன் கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவர் ஜெய்ப்பூரின் கத்திபுரா என்ற பகுதியில் வசித்து வந்தார். இவர் ஆயுர்வேத முறையில் மசாஜ் செய்வதை வேலையாக செய்து வந்தவர்.
பாதிக்கப்பட்ட பெண்மணியின் வழக்கை ஏற்று பிஜூ வின் மீது IPC பிரிவு 376 ன் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை வழக்கு பதிந்ததோடு, குற்றம் சாட்டப்பட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அந்த பெண்ணிடம் மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டதோடு, இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதாக சிந்தி கேம்ப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
from Latest News https://ift.tt/mKSN5a3
0 Comments