Doctor Vikatan: ஒரு வயதாகியும் குழந்தை இன்னும் நடக்கவில்லை; காத்திருக்கலாமா?

எங்களுடைய ஒரு வயது ஆண் குழந்தை எப்போது நடக்க ஆரம்பிக்கும்? குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறான். ஆனால் நடக்க முயற்சி செய்யவில்லை. எத்தனை நாள்கள் காத்திருக்கலாம்?

- அப்துல் ரஷீத் (விகடன் இணையத்திலிருந்து)

எஸ். ஸ்ரீநிவாஸ்

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த குழந்தைகள்நல மருத்துவர் எஸ். ஸ்ரீநிவாஸ்.

``குழந்தைகளின் வளர்ச்சிப் படிநிலைகளில் (Developmental Milestones) நடந்து பழகுவதென்பது மிக முக்கியமானதொரு (Key Milestone) நிகழ்வு. குழந்தை, பொதுவாக 13 முதல் 15 மாதங்களுக்குள் மற்றவர்களின் உதவி இல்லாமல், எதையும் பிடிக்காமல் தானாக நடக்க ஆரம்பிக்கும். சில குழந்தைகள் 8 மாதங்களிலேயே நடக்க ஆரம்பிக்கலாம். இது குழந்தைக்கு குழந்தை மாறுபடும்.

உங்கள் குழந்தைக்கு ஒரு வயதுதான் ஆகிறது என்பதால் இன்னும் ஒன்றிரண்டு மாதங்கள் காத்திருக்கலாம்.

Baby - Representative Image

18 மாதங்களுக்குப் பிறகும் நடக்க ஆரம்பிக்கவில்லை என்றால், தாமதிக்காமல் குழந்தைகள்நல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


from Latest News https://ift.tt/oEwbqIT

Post a Comment

0 Comments