`சீனாவும், அமெரிக்காவும் ஒரே பாதையில் செல்ல வேண்டும்!’ - பைடன், ஜி ஜின்பிங் பேசியது என்ன?

உக்ரைனில் ரஷ்யப் படையினர் நடத்திவரும் போரானது 24-வது நாளை எட்டியுள்ளது. ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்க்கும் விதமாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. ஆனால், ரஷ்யாவின் இத்தகைய செயலை கண்டிக்கும் விதமாக, சீனா தரப்பிலிருந்து இதுவரை எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. இதைத்தொடர்ந்து அண்மையில் , உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா, சீனாவிடம் ராணுவ உதவி கேட்பதாக தகவல்கள் வெளியானது.

உக்ரைன்-ரஷ்யா போர்

இந்த நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் தொலைப்பேசி வாயிலாக பேசியுள்ளனர். அந்தப் பேச்சுவார்த்தையில், உலக அமைதி மற்றும் அதற்கான முயற்சிகளில், உலகின் முதல் இரண்டு பொருளாதார நாடுகளுக்கு இடையிலான உறவுகள் சரியான, ஒரே பாதையில் முன்னேற வேண்டும். மேலும், சர்வதேச பொறுப்புகளைச் சீனாவும் அமெரிக்காவும் தோளில் சுமக்க வேண்டும்" என பைடனிடம், சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசினார்.

இந்த தொலைபேசி பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, ``ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்குச் சீனா ஆதரவளித்தால், `அந்த நடவடிக்கைக்கு சீனா பொறுப்பேற்க வேண்டும் என்பதை அமெரிக்கா தெளிவுபடுத்தும்" என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி ஜே பிளிங்கன் சீனாவை எச்சரிக்கும் தொனியில் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



from Latest News https://ift.tt/dZcnVUw

Post a Comment

0 Comments