என் வயது 63. நான் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டேன். பூஸ்டர் தடுப்பூசி போட ஜனவரி 20 தகுதியான நாள். இந்நிலையில் ஜனவரி 13-ம் தேதி எனக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று ஏற்பட்டது. நான் இனி எப்போது பூஸ்டர் டோஸ் போட்டுக்கோள்ள வேண்டும்? தடுப்பூசிக்கு பக்க விளைவுகள் இருக்குமா?
- கணேசன் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் குமாரசாமி.
``கோவிட் தொற்று ஏற்பட்டு குணமானவர்களும் கோவிட் தொற்றைத் தடுக்கும் தடுப்பூசியை அவசியம் போட்டுக்கொள்ள வேண்டும். பூஸ்டர் டோஸ் என்றில்லை, முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசிகளையும் கோவிட் தொற்று உறுதியான நாளிலிருந்து இரண்டு மாதங்கள் கழித்துப் போட்டுக் கொள்ளலாம். அந்த வகையில் உங்களுக்கு ஜனவரி 13-ம் தேதி கோவிட் தொற்று உறுதியானதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.
எனவே நீங்கள் மார்ச் 15-ம் தேதிக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் உங்களுடைய பூஸ்டர் டோஸை போட்டுக் கொள்ளலாம்.
தடுப்பூசி செலுத்திக் கொள்வோருக்கு லேசான காய்ச்சல் வருவது சகஜம். தடுப்பூசி போடப்படும் இடங்களிலேயே அதற்கான பாராசிட்டமால் மாத்திரைகள் தருவார்கள். தடுப்பூசி போட்டுக்கொள்ளும் எல்லோருக்கும் அப்படி வர வேண்டும் என்றும் அவசியமில்லை. எனவே நீங்கள் பக்க விளைவுகள் குறித்து பயப்படத் தேவையில்லை."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
from Latest News https://ift.tt/6TeCsbx
0 Comments