'Solar Storm' எனப்படும் சூரிய புயல் நேரடியாக பூமியின் வளிமண்டலத்தை ஓரிரு நாள்களுக்குள், அதாவது இன்று (மார்ச் 31) தாக்க நேரிடும் என்று அமெரிக்காவின் நாசா (NASA) எச்சரித்துள்ளது. சூரியனின் மேற்பரப்பிலிருந்து மின்காந்த வெடிப்புகள் மற்றும் சக்திவாய்ந்த ஆற்றல்கள் வெளிப்படுவதால் இந்நிகழ்வு சூரியப்புயல் எனப்படுகிறது.
குறிப்பாக பூமியில் இங்கிலாந்து பகுதி அருகே வலுவான சூரியப் புயல் மோதும் அபாயம் இருப்பதாக நாசா (NASA) எச்சரித்துள்ளது. இந்த நிகழ்வின் துல்லியமான நேரம் குறித்து சரியான தகவலில்லை. ஆனால், இதன் தாக்கம் மார்ச் 31 வரை இருக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். மேலும் சில பகுதிகளில் இந்தப் புயல் வலுப்பெறும்போது 'பிரகாசமான ஒளி' தென்படுமாம்.
சூரியப் புயலின் தாக்கம் மற்றும் பாதிப்புகள்:
சூரியனின் coronal mass ejection மற்றும் solar flares போன்ற நிகழ்வுகளால் பூமியில் ஏற்படும் வளிமண்டல விளைவுகளால் இது போன்ற சூரியப்புயல் ஏற்படுகிறது. அதே போல, சூரிய காற்று (Solar Winds) பூமியின் காந்தப்புலம் அல்லது வளிமண்டலத்தில் நுழையும்போது அது வளிமண்டலத்தை வண்ணமயமாக ஒளிரச் செய்கிறது. இதையே aurora polaris என்கின்றனர்.
இந்நிகழ்வு வடக்கு அரைக்கோளத்தில் நிகழும் போது 'Northern lights' என்றும் தெற்கு அரைக் கோளத்தில் நிகழும் போது 'Southern lights' என்றும் அழைக்கப்படுகிறது. இதுவும் இந்தச் சூரிய புயலால் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். ஆனால், இதை வெகுசில இடங்களில் மட்டுமே காணமுடியும்.
இதனால், உலகில் பல இடங்களில் இன்டர்நெட் மற்றும் GPS சேவை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளனர் விஞ்ஞானிகள். புயலின் தாக்கத்தால் high frequency ரேடியோ அலைகள் மற்றும் அதன் இணைப்பு பாதிக்கப்படலாம். மின்சார கட்டுமானங்களையும் இந்தப் புயல் பாதிக்கக்கூடும்!
இது முதல்முறை இல்லை. சமீபகாலங்களில் இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன. சமீபத்தில் 40 ஸ்டார்லிங்க் செயற்கைகோள்கள் இப்படி ஒரு புயலால் செயலிழந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
from Latest News https://ift.tt/V6tognE
0 Comments