லோ சுகர் பிரச்னை உள்ளவர்களுக்கு அடிக்கடி மயக்கம் ஏற்படுகிறதே? இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்? உடனே இனிப்பு சாப்பிட வேண்டும் என்கிறார்கள். இது சரியா?
- சுகன் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி.
``நீங்கள் குறிப்பிடும் `லோ சுகர்' நிலையை `ஹைப்போ கிளைசீமியா' என்று சொல்வோம். ஃபாஸ்டிங் நிலையில் இப்படி ஏற்படலாம். அதாவது ஒரு நபர் 15 மணி நேரத்துக்கும் மேல் சாப்பிடாமல் இருக்கிறார் என்றால் அவருக்கு இப்படி நிகழலாம். அதேபோல நீரிழிவுக்கும் அதற்கு ஒருவர் எடுத்துக்கொள்ளும் மருத்துவத்துக்கும் சமநிலை இல்லாதபோதும் ஹைப்போ கிளைசீமியா வரலாம். ரத்தத்திலுள்ள சர்க்கரைப் பரிமாற்றம் குறைவதையே இப்படிக் குறிப்பிடுகிறோம். அந்த நேரத்தில் சிலருக்கு தலைச்சுற்றல், பதற்றம், படபடப்பு, உடல் வியர்ப்பது, தலைவலி போன்ற அறிகுறிகள் தென்படலாம்.
உடலில் ஒருவித அசௌகர்யத்தை உணர்வார்கள். பலரும் இதைத் தவறாகப் புரிந்துகொண்டு அளவுக்கதிமாக சாக்லேட், இனிப்புகளைச் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இது தவறு. அடிக்கடி இப்படி ஏற்படுகிறது என்றால் மருத்துவரை அணுகி, அதற்கான சரியான சிகிச்சையைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.
ரத்தச் சர்க்கரை அளவு 45-க்கும் கீழே போனால்தான் மோசமான ஹைப்போ கிளைசீமியா நிலை. 45-க்கு மேல் இருக்கும் பட்சத்தில் மருத்துவரை அணுகி அவர் ஆலோசனையைச் சரியாகப் பின்பற்றினாலே இந்தப் பிரச்னை மீண்டும் வராமல் பார்த்துக்கொள்ளலாம்."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
from Latest News https://ift.tt/0Ypmjsw
0 Comments