`மோட்டி புது வாழிடத்துக்கு செல்லட்டும்!' ஹரியானா டூ குஜராத்; யானையை இடம் மாற்ற உத்தரவிட்ட நீதிமன்றம்!

யானைகள் இந்த நிலத்தின் அரசர்கள். பல கி.மீ. தூரத்திற்கு நீளும் அவற்றின் வலசை, காடுகளின் சுத்திகரிப்புக்கான சான்று. இயற்கையின் சமநிலை பேணும் தூதுவர்கள் பல்வேறு காரணங்களால் இடம்பெயர முடியாமல் ஊர்பகுதிகளுக்குள் உணவுக்காக வரத்தொடங்குகின்றன. யானைகளின் நினைவுகளில் இருக்கும் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அவற்றின் வலசை தடைப்படுகிறது.

மோட்டி என்கிற பெண் யானையை ஹரியானாவில் இருந்து குஜராத்துக்கு இடம்பெயரச் செய்ய்ய நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. மோட்டி எதனால் வேறு இடத்திற்கு அனுப்பப்பட வேண்டும்!

Motti என்கிற பெண் யானை அதன் உரிமையாளரிடம் இருந்து வனவாழ்வு (பாதுகாப்பு) சட்டம் 1972, பிரிவு 42-ன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. வளர்ப்பு விலங்குகள் வைத்திருப்பதற்கான உரிமை சான்றிதழ் இல்லாத பட்சத்தில் இந்தப் பிரிவின் கீழ் அரசு, வளர்ப்பு விலங்குகளைப் பறிமுதல் செய்ய முடியும். மோட்டி ஹரியானா மீட்பு மையத்தில் தற்போது பேணப்பட்டு வருகிறது.

யானைகள்

யானையின் உரிமையாளர் நீதிமன்றத்தில் மோட்டியை வேறு நல்ல இடத்திற்கு இடம்பெயர்க்க வலியுறுத்தியும் ஜாம்நகரில் இருக்கும் அதன் உறவினர்களான Gangaram (male), Dhonmati (female), Matti (female), and Chandani (female) ஆகியவற்றுடன் இணைத்து விடுமாறும் தாக்கல் செய்த வழக்கின் கீழ் நீதிமன்றம் தற்போது ஆணை பிறப்பித்துள்ளது. இந்தச் செலவை மனுதாரரே ஏற்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஹரியானாவில் இருந்து 'கிருஷ்ணன் கோவில் நிர்வாக கமிட்டி, மோடி காவ்தி, ஜாம்நகர்' - குஜராத்தில் இருக்கும் வாழ்விடத்துக்கு ஏப்ரல் 15-க்குள் அனுப்பி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, யானையின் நலனுக்காகவும், 400 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் ஜாம்நகர் வாழிடம் 'அதன் வலசைக்கு சிறந்த வாழிடமாக' அமையும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மனுதாரர் தரப்பில் யானைக்கு போதுமான பராமரிப்பு மற்றும் பேணுதல் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எப்படி இருப்பினும் அரசு உடனே இது போன்ற பறிமுதல்களை மேற்கொள்ள முடியாது. இது ஏற்கத்தக்கதல்ல என நீதிமன்றம் பரிந்துரைக்கிறது. காரணம் வளர்ப்பு விலங்குகள் உடனடியாக புதியவர்களிடம் பழகிவிடாது. உரிய ஆணை பெறப்பட்ட பிறகுதான் பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.



from Latest News https://ift.tt/uXA0MZY

Post a Comment

0 Comments