``ஓட்டு அரசியலுக்காக அம்பேத்கரை பட்டியலின தலைவராக பயன்படுத்தியது காங்கிரஸ்!"- மத்திய அமைச்சர் சாடல்

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை எனப் போற்றப்படும் டாக்டர் அம்பேத்கரின் 131-வது பிறந்தநாள் இந்தியா முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் மத்திய சமூக நீதி துறை அமைச்சர் வீரேந்திர குமார், ``காங்கிரஸ், ஓட்டு அரசியலுக்காக அம்பேத்கரை ஒரு பட்டியலின தலைவராக உருவகப்படுத்தி, அவரின் பெயரைப் பயன்படுத்தியது" என காங்கிரஸைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, செய்தியாளர்களிடம் பேசிய வீரேந்திர குமார், ``ஓட்டு அரசியலுக்காகக், அம்பேத்கரின் பெயரை எடுக்கும் வேலையை காங்கிரஸ் செய்தது. அம்பேத்கருக்கு மரியாதை அளிக்கும் வகையில் எந்தவித நடவடிக்கையையும் காங்கிரஸ் எடுக்கவில்லை.

மத்திய சமூக நீதி அமைச்சர் வீரேந்திர குமார்

அம்பேத்கரின் மறைவுக்குப் பின்னர் இருந்த அப்போதைய அரசுகள், அவருக்கு நினைவிடங்களை எழுப்புவதற்கான எந்த முயற்சியையும் செய்யவில்லை. ஆனால் 2014-ல் மோடி பிரதமரான பிறகு அம்பேத்கருக்கு பஞ்ச தீர்த்தங்கள் கட்டப்பட்டது. பா.ஜ.க ஆதரவு அரசு ஆட்சி செய்யும் போதுதான் அம்பேத்கருக்குப் பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டது. தற்போது அம்பேத்கரின் கனவை நனவாக்கும் பணியை மோடி தலைமையிலான அரசு செய்து வருகிறது.” என்றார்.



from Latest News https://ift.tt/PdUcgDX

Post a Comment

0 Comments