ஐதராபாத்தின் குகத்பல்லி என்ற இடத்தை சேர்ந்தவர் இப்ராகிம் ஷேக். இவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் என வாழ்க்கை நிம்மதியாக சென்று கொண்டிருந்தது. கடந்த ஆண்டு ஷேக் திருமணமான ஒரு பெண்ணை சந்தித்தார். பின் இருவரும் எந்நேரமும் வாட்ஸ்அப்பில் சாட்டிங் செய்வது, வீடியோ காலில் பேசுவது என்று இருந்திருக்கின்றனர். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு திடீரென இரண்டு பேரும் வீட்டை விட்டு வெளியேறினர்.
10 லட்சம் கடன் வாங்கி செலவு:
கணவன் வீட்டை விட்டு வெளியேறியதால் அவரின் மனைவி தனது குழந்தைகளிடம், `அப்பா டெல்லியில் வேலைக்காக சென்று இருக்கிறார்’ எனக் கூறி சமாதானப்படுத்தினார். வீட்டை விட்டு திருமணத்தை தாண்டிய உறவில் இருந்த பெண்ணுடன் வெளியேறிய ஷேக்கிற்கு, `ஏன் ஓடி வந்தோம்?’ என்ற ஒரு நிலை ஏற்பட்டது.
அப்பெண்ணின் ஆடம்பர செலவை சமாளிக்க முடியாமல் என்ன செய்வது என்று தெரியாமல், மீண்டும் ஐதராபாத்திற்கு வந்து தனது மனைவியிடம் தனது தவறை மன்னித்து என்னை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டார். ஆனால் அவரின் மனைவி ஷேக்கை ஏற்றுக்கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். ஷேக் இப்பிரச்னையை காவல் நிலையத்துக்கு எடுத்துச்சென்றார். போலீஸார் ஷேக் மனைவியிடம் சமாதானம் பேசிப்பார்த்தனர். ஆனால் ஷேக்கை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஷேக் வீட்டைவிட்டு வெளியேறிய போது தனது திருமணத்தை தாண்டிய உறவு பெண்ணுக்கு ஆடம்பர செலவுக்கு 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார். ஒரு மாதத்தில் தங்கும் செலவு, சாப்பாடு என 10 லட்சம் செலவு செய்ததாகவும் மேற்கொண்டு என்னால் செலவை சமாளிக்க முடியாமல் ஓடிவந்துவிட்டதாக ஷேக் போலீஸாரிடம் தெரிவித்தார். ஷேக் தனது உறவினர்களை அழைத்து சென்று தனது மனைவியிடம் சமாதானம் பேசிப்பார்த்தார். ஆனாலும் ஷேக்கை அவரது மனைவி ஏற்றுக்கொள்ள முடியாது என்று பிடிவாதமாக தெரிவித்துவிட்டார். இதனால் புது உறவில் வாழ வழியில்லாமல் இல்லாமல், மனைவியும் இல்லாமல் என்ன செய்வது என்று தெரியாமல் ஷேக் திணறி வருகிறார்.
from Latest News https://ift.tt/azoJPkg
0 Comments