``போலிச் சான்றிதழ் விவகாரத்தில் தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் வலியுறுத்தியிருக்கிறார்.
போட்டித் தேர்வு பயிற்சி அளிக்கும் விழாவில் கலந்துகொள்ள மதுரை வந்திருந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் செய்தியாளர்களிடம் பேசும்போது,
``தமிழகத்தில் 90 லட்சம் பட்டதாரி இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கிறார்கள். ஆனால், வட மாநில இளைஞர்கள் போலிச் சான்றிதழ் கொடுத்து பணிக்கு சேர்ந்திருப்பது வருந்தத்தக்கது. போலிச் சான்றிதழ் விவகாரத்தில் தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்தியப் பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வை ரத்து செய்தால் மட்டுமே கிராமப்புற மாணவர்கள் கல்வி பயில முடியும்.
நான் அரசியல் கட்சி ஏதும் தொடங்கவில்லை. ஏழாண்டு காலம் எந்தவொரு அதிகாரமும் இல்லாத பணியில் இருந்தேன். அதன் காரணமாக பதவியிலிருந்து விலகினேன். ஐ.ஏ.எஸ் பணியில் இருந்து விலகியபோது முன்னணிக் கட்சியிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. நான் போகவில்லை.
என் கொள்கை பிடித்த இளைஞர்கள் தேர்தலில் நின்றார்கள். அவர்களுக்காக பிரசாரம் செய்தேன். ஊழல் செய்ய வேண்டும், லஞ்சம் கொடுக்க வேண்டும் என்கிற நிலைதான் தற்போது உள்ளது.
தமிழ் மண்ணுக்காக, ஈழத் தமிழர்களுக்காக, சாதிக்கு எதிராக அனைவருக்குமாக தமிழக அரசு செயல்படும் என நம்புகிறேன்.

இளைஞர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை, இயற்கை வளங்களை சூரையாடுவது, ஊழல் ஆகியவைகளை தடுக்க இளைஞர்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும், மாணவர்களின் ஒழுக்கதில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், அப்படி மாணவர்கள் ஒழுக்கம் தவறி செல்வதில் சமூகத்திற்கும் பங்குண்டு.
மாணவர்கள், இளைஞர்கள் போதை வழிக்கு செல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும், பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும். குழந்தைகளுடன் பேசி தீர்வு காண வேண்டும்" என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/mToMYw9
0 Comments