அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் பஃபேலோ சூப்பர் மார்க்கெட்டுக்கு கடந்த சனிக்கிழமை காரில் வந்து இறங்கிய கவச உடை அணிந்த 18 வயது இளைஞர் ஒருவர் திடீரென சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
அவரின் திடீர் தாக்குதலில் 10 பேர் வரை பலியானதாகக் கூறப்படுகிறது. இந்த கொடூரமான துப்பாக்கிச்சூட்டில் ஆப்ரிக்க அமெரிக்கர்கள் 8 பேரும் 2 அமெரிக்கர்களும் இறந்ததாகக் கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டை அங்கிருந்த முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் சரியான நேரத்தில் தடுத்ததால் அதிகமான உயிர்ப் பலி ஏற்படாமல் தடுக்கப்பட்டது.
உடனே சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இது தொடர்பாக நியூயார்க் நகர காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ”கவச உடை அணிந்து சனிக்கிழமை அன்று அங்காடிக்கு வந்த நபர், கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். அவர் அணிந்திருந்த ஹெல்மெட்டில் பொருத்தப்பட்ட கேமரா உதவியுடன் இதனை அவர் சமூகவலைதள பக்கத்தில் நேரலையும் செய்தார். இனவெறி நோக்கத்திலே இந்த தாக்குதல் நடந்திருக்கிறது. சோதனையில் கைப்பற்றப்பட்ட தகவல்களில் யூத எதிர்ப்பு, இனவெறி தொடர்பான வெள்ளை அறிக்கைகள் இருந்தது. இதுதொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறோம். அவர் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர், தனது ஊரில் இருந்து 300 கிலோ மீட்டர் பயணம் செய்து இங்கு வந்த தக்குதல் நடத்த வேண்டிய அவசியம் குறித்து விசாரித்து வருகிறோம்” என்றார்.
from Latest News https://ift.tt/FVLQ9G5
0 Comments