மும்பை: கல் குவாரியில் தவறி விழுந்த சிறுவன் - மீட்க குதித்த 4 பேர் உட்பட 5 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகில் உள்ள டோம்பிவலியில் கல் குவாரி ஒன்றில் மழை நீர் தேங்கி இருந்தது. தற்போது கோடை காலம் என்பதால் ஒரு சில இடங்களில் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தண்ணீர் தேடி பல இடங்களுக்கு அலைந்துகொண்டிருக்கின்றனர். மக்கள் தண்ணீருக்காக குடங்களுடன் கிலோமீட்டர் கணக்கில் நடந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், டோம்பிவலியில் இருக்கும் கல் குவாரியில் தேங்கி இருக்கும் தண்ணீரில் துணிகளுக்கு சோப்பு போடுவதற்காக மீரா கெய்க்வாட் என்ற பெண்மணி, தன் மருமகள் அபக்‌ஷா மற்றும் பேரக்குழந்தைகளுடன் சென்றார். அங்கு மீராவும், அவர் மருமகளும் துணிகளை துவைத்துக்கொண்டிருந்தபோது, மீராவுடன் வந்த அவரின் பேரக்குழந்தைகள் கல்குவாரி மேல் அமர்ந்திருந்தனர். அந்த நேரம் எதிர்பாராதவிதமாக, மீராவின் பேரன் ஒருவன் தவறி தண்ணீருக்குள் விழுந்துவிட்டான். உடனே அவனைக் காப்பாற்ற அவனின் இரண்டு சகோதரிகள் தண்ணீரில் குதித்தனர்.

மரணம்

அவர்களின் தாயாரும் தண்ணீரில் குதித்தார். ஆனால், துரதிஷ்டவசமாக மொக்‌ஷா(13), மீரா கெய்க்வாட்(55) உட்பட 5 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டனர். அவர்கள் தண்ணீரில் மூழ்கியது குறித்து கிராம மக்கள் மான்பாடா போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸார் விபத்து என வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து தண்ணீர் இருக்கும் கல் குவாரியை மூடவேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



from Latest News https://ift.tt/6DdWc1l

Post a Comment

0 Comments