ஐக்கிய நாடுகள் சபையில் இந்தி மொழியை ஊக்குவிக்கும் வகையில் 8 லட்சம் அமெரிக்க டாலர் தொகையைக் காசோலையாக ஐநா-வுக்கான இந்தியத் தூதர் ரவீந்திரா வழங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த செய்திக்குறிப்பில், ``ஐ.நா சபையில் இந்தி மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்க்கொண்டு வருகிறது. அதனால் கடந்த 2018-ம் ஆண்டு ஐ.நா சபையின் செய்திகளை இந்தியில் மொழிபெயர்த்து உலகெங்கும் உள்ள இந்தி பேசும் மக்களிடம் கொண்டு சேர்த்து, உலக பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு திட்டத்தைத் தொடங்கியது.
அதைத் தொடர்ந்து ஐ.நா-வின் செய்திகளை ஒருங்கிணைக்க நிதி வழங்கி ஐ.நா-வின் தகவல் தொடர்புடனும், ஐ.நா-வின் இந்தி முகநூல் பக்கம் மூலம் அனைத்து செய்திகளும் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் தற்போது மேலும் இந்தியை ஊக்குவிக்க இந்தியா 8 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 6,18,14,120.00) வழங்கியுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவின் இந்த முன்னேற்பாடுகளால் 2018 முதல், ஐநாவின் இணையதளம், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் சமூக ஊடகக் கையாளுதல்கள் மூலம் ஐநா செய்திகள் இந்தியில் பரப்பப்படுகின்றன. மேலும், ஐ.நா-வின் செய்திகள் குறித்து இந்தி ஆடியோ UN Radio மூலம் ஒவ்வொரு வாரமும் வெளியிடப்படுகிறது. இதன் இணைய இணைப்பு UN இந்தி செய்தி இணையதளத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
from Latest News https://ift.tt/wbXfkM7
0 Comments