கடந்த அன்னையர் தினத்தன்று தனியார் விமான நிறுவனம் தனது சமூகவலைதளப் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டது. அந்த வீடியோவில், ஒரு விமானத்தின் விமானிகள் அறையிலிருந்து ஓர் ஆண் பைலட்டும், அவருடன் சக பைலட்டான ஒரு பெண்ணும் வெளியே வருகின்றனர். அங்கிருக்கும் மைக்கில் பேசும் அந்த ஆண் பைலட்டின் பெயர், அமன் தாகூர்.
"லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன், நான் உங்கள் தலைமை விமானி அமன் தாக்கூர். இன்று மிகவும் சிறப்பான அன்னையர் தினம். நீங்கள் உங்கள் வாழ்த்துகளை உங்கள் அம்மாவுக்குத் தெரிவித்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். 24 ஆண்டுகளாக எனது வாழ்நாளில், பல விமானங்களில், அந்த விமானத்தை என் அம்மா இயக்க நான் பயணித்திருக்கிறேன். ஆனால் இன்று நான் இயக்க, என் அம்மா சக விமானியாக என்னுடன் பயணம் செய்யப் போகிறார்.
இதுவே என் அம்மாவுக்கான எனது அன்னையர் தின பரிசு. என் வாழ்வை வண்ணமயமாக்கியதற்கு மிக்கநன்றி!" என்று மனம் நெகிழ்ந்து அம்மாவைக் கட்டியணைத்து ரோஜா பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். தன் மகனின் பாசத்தின் வெளிப்பாடான பூங்கொத்தை நெகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டார் அந்தத் தாய்.
24 வயதாகும் அன் தாகூர், சிறுவயதிலிருந்தே தன் அம்மாவைப்போல் விமானியாக வேண்டும் என்ற லட்சியத்துடன் படிப்பை முடித்து விமானியாகப் பணியில் அமர்ந்துள்ளார். அந்த அழகான தருணத்தின் வீடியோவை இதுவரை பல லட்சம் பேர் பார்த்து லைக்குளை பறக்கவிட்டுள்ளனர். இந்த நிகழ்வு எங்கு, எந்த விமானத்தில் நிகழ்ந்தது போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
from Latest News https://ift.tt/GSyJMCt
0 Comments