``பொது சிவில் சட்டம் இஸ்லாமிய பெண்களுக்கு கவுரவம் அளிக்கும்; அதை அமல்படுத்துங்க” - அஸ்ஸாம் முதல்வர்

இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் மற்றும் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர்.

மோடி..!

இந்த நிலையில், அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, டெல்லியில் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியை சந்தித்து பேசினார். அதன் பிறகு செய்தியாளர்களிடத்தில் பேசிய அவர், ``நான் சந்தித்த அனைத்து இஸ்லாமியர்களும் பொது சிவில் சட்டத்தை விரும்புகின்றனர். எந்த இஸ்லாமியப் பெண்ணும் தனது கணவருக்கு மூன்று மனைவிகள் இருக்க வேண்டும் என்று விரும்புவதில்லை. இதை எந்த இஸ்லாமிய பெண்ணிடம் வேண்டுமென்றாலும் கேட்கலாம்.

ஒரு இஸ்லாமிய ஆண் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வது அவருடைய பிரச்னையல்ல, மாறாக அது இஸ்லாமிய தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் பிரச்னை. இஸ்லாமிய பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு சமூகத்தில் கவுரவம் வழங்கப்பட வேண்டுமானால், முத்தலாக் தடைக்குப் பிறகு, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டம் இருக்க வேண்டும். அதனால் நாங்கள் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக இருக்கிறோம்’’ என்றார்.



from Latest News https://ift.tt/UQ8fDZw

Post a Comment

0 Comments