``டெல்லி மக்கள் அதிக அன்பை கொடுத்தனர்... நீங்களும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்!" - குஜராத்தில் கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சி டெல்லி, பஞ்சாப்பை கைப்பற்றிய கையோடு, தற்போது குஜராத் அரசியலில் தீவிரம் காட்டி வருகிறது. இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் பல்வேறு பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தின் பருச்சில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ``வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும். எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் வறுமையை ஒழிப்போம். இலவச கல்வி மற்றும் நல்ல மருத்துவ வசதிகளை அளிப்போம். குஜராத் மக்களுடன் வாழ்நாள் முழுவதுக்குமான உறவை ஏற்படுத்த விரும்புகிறேன்.

பிரதமர் மோடி - அரவிந்த் கெஜ்ரிவால்

குஜராத் மாநிலத்தில் அரசுப் பள்ளிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. குஜராத்தில் 6,000 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இன்னும் பல பள்ளிகள் பாழடைந்த நிலையில் உள்ளன. லட்சக்கணக்கான குழந்தைகளின் எதிர்காலம் சீர்குலைந்துள்ளது. குஜராத்தில் தேர்வின்போது கேள்வி தாள் கசிவு இல்லாமல் ஒரே ஒரு தேர்வை நடத்திக் காட்டுமாறு குஜராத் முதல்வர் பூபேந்திர படேலுக்கு சவால் விடுகிறேன். மேலும் பாஜகவுக்கு 5 ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்தால் இங்கு எதுவும் மாறாது. டெல்லி மக்கள் எங்களுக்கு மிகுந்த அன்பைக் கொடுத்துள்ளனர். நீங்களும் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். எங்கள் ஆட்சி உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், அடுத்த முறை எங்களுடைய ஆட்சியை வெளியேற்றி விடுங்கள்’’ என்றார்.



from Latest News https://ift.tt/dW3aqJ6

Post a Comment

0 Comments