மேற்கு வங்கத்தில் இன்னும் வளர்ச்சிப் பணிகளை அதிகரிக்க பெரிய மாவட்டங்களைப் பிரித்து, புதிதாகச் சில மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார். இது தொடர்பாக மேற்கு வங்க சிவில் சர்வீஸ் அதிகாரிகளுடனான கூட்டத்தில் பேசிய அவர், ``மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக அதிக மாவட்டங்களை உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
ஆனால், இந்தத் திட்டங்களைச் செயல்படுத்த போதிய உட்கட்டமைப்புகள் மற்றும் ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் தற்போதுள்ள 23 மாவட்டங்களின் பரப்பளவு பெரியது, எனவே அவற்றைப் பிரித்து எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த நோக்கத்துக்காக மாநிலத்துக்கு அதிக மனிதவளம் மற்றும் உட்கட்டமைப்பு தேவைப்படுகிறது. மிகப்பெரிய மாவட்டங்களைப் பிரிப்பதால், மாநிலத்தில் அதிக மாவட்டங்கள் உருவாகும். இது வளர்ச்சிப் பணிகளை விரைவுபடுத்த உதவும்.
ஆனால், மத்திய அரசு இன்னும் மேற்கு வங்கத்துக்கு வழங்க வேண்டிய மத்திய அரசு நிதியை வழங்கவில்லை. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 100 நாள் வேலைத் திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை.
சம்பளம் கொடுக்காவிட்டால் மக்கள் எப்படி வேலை செய்வார்கள் என்று சொல்லுங்கள். மத்திய அரசு மாநிலங்களிடம் இருந்து அதிக வருவாயை வசூலித்து அதில் சொற்பப் பகுதியை மட்டுமே பகிர்ந்து கொள்கிறது" என்று கூறினார்.
from Latest News https://ift.tt/72DitYU
0 Comments