பிரிட்டனில் இரண்டாவது முறை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளி சுனில் சோப்ரா! - யார் இவர்?

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் சுனில் சோப்ரா பிரிட்டனில் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் மேயராவது இது இரண்டாவது முறை.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஒரு பரோ(மாகாணம்) சவுத்வார்க். இந்த மாகாணத்தில் 2014-2015-ஆம் ஆண்டின் மேயராகவும், 2013-2014-ஆம் ஆண்டின் துணை மேயராகவும் பதவி வகித்தவர் சுனில். இந்த மாகாணத்தின் முதல் இந்திய வம்சாவளி மேயர் இவர் தான். 2 சதவிகித இந்திய வம்சாவளியினர் மட்டுமே வசிக்கும் ஒரு தொகுதியில் இவர் வெற்றி கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டன்

2010-இல் அரசியலில் ஈடுபடத் தொடங்கிய இவர், லேபர் பார்ட்டி லண்டன் ப்ரிஜ், வெஸ்ட் பெர்மொண்ட்ஸே ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற பெரும் பங்கு வகித்தார். பல ஆண்டுகளாக லிபரல் டெமோக்ரட்ஸ் கட்சியின் வசம் இருந்த தொகுதிகளை லேபர் பார்ட்டி கைபற்றியுள்ளது.

சுனில் சோப்ரா

சுனில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக லண்டனில் வசித்து வருகிறார். 1979 ஆம் ஆண்டில், இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்த பிறகு, சோப்ரா ஒரு சிறிய கடையைத் தொடங்கினார். அது குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் இதர தயாரிப்புகளை மொத்த விலைக்கு விற்பனை செய்யும் வணிக நிறுவனமாக வளர்ந்தது. இங்கிலாந்தில் உள்ளூர் சமூகப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மேலும், இந்திய கலாசார நிகழ்வுகள் மற்றும் சமூகப் பணிகளை ஏற்பாடு செய்து வந்துள்ளார். மேயராவதற்கு முன் மூன்று முறை டெபுடி மேயராகப் பதவி வகித்துள்ளார் சுனில்.



from Latest News https://ift.tt/qAEIGKP

Post a Comment

0 Comments