இந்துக்களின் புனிதப் பொருளாகக் கருதப்படும் மாட்டுக் கோமியம் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டது எனப் பலரும் கூறி வருகின்றனர். ஆனால், மருத்துவ உலகில் இதுவரையிலும் இந்தக் கூற்று மெய்ப்பிக்கப்படவில்லை. அண்மையில், `கொரோனா வேகமாகப் பரவிவந்த காலகட்டத்தில், எனக்கு கொரோனா வராததற்கு காரணம், நான் மாட்டுக் கோமியம் அருந்துவதே!' என உத்தரப்பிரதேச பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் கருத்து தெரிவித்திருந்தது மிகப் பெரியளவில் பேசுப் பொருளானது.
இந்த நிலையில், உ.பி-யில் மாநில அமைச்சர் ஒருவர் மாட்டுக் கோமியத்தை வீட்டு வாசலில் தெளித்தால் அனைத்துப் பிரச்னைகளும் நீங்கும் எனக் கூறியிருக்கிறார்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள பசு காப்பகங்களின் நிலை குறித்த செய்தியாளர் கேள்விக்கு கால்நடைத்துறை அமைச்சர் தரம்பால் சிங் பதிலளித்து பேசினார். அப்போது அவர், ``மாட்டுக் கோமியத்தை வீடுகளில் தெளிப்பதன் மூலம் வாஸ்து பிரச்னைகள் நீங்கும். வேறு ஏதேனும் தடைகள் இருந்தாலும் நீங்கும். பசுவின் சிறுநீரில் கங்கா தேவி வசிக்கிறாள். மாட்டு சாணத்தில் லட்சுமி வசிக்கிறாள். பசுக் காப்பகங்களை மேம்படுத்த பா.ஜ.க அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. விரைவில் இது தொடர்பான பிரச்னைகள் தீர்க்கப்படும்'' என்றார்.
from Latest News https://ift.tt/oQURt9J
0 Comments