``உக்ரைன் போரில் யாருக்கும் வெற்றி கிடைக்காது; அதனால் தான் அமைதியை ஆதரிக்கிறோம்!” - பிரதமர் மோடி

2021 டிசம்பரில் ஜெர்மனியின் பிரதமராக ஓலஃப் ஸ்கால்ஸ் பதவியேற்றிருந்தார். இந்த நிலையில், அவர் பதவியேற்ற பிறகு முதல்முறையாகப் பிரதமர் மோடி அவரை நேரில் சந்தித்து நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். ஸ்கோல்ஸுடன் பெர்லின் நகரில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மோடி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய மோடி, ``உக்ரைனில் போர் தொடங்கியதிலிருந்தே நாங்கள் போர்நிறுத்தத்தைத் தான் வலியுறுத்தியுள்ளோம். இந்தப் போரில் யாரும் வெற்றிபெற மாட்டார்கள், அனைவருமே தோற்றுப்போவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம், அதனால் தான் நாங்கள் அமைதியை ஆதரிக்கிறோம்.

மோடி - ஓலாஃப் ஷோல்ஸ்

உக்ரைன் மக்கள் மீதான இந்த மனிதாபிமான தாக்கத்தைத் தாண்டி, எண்ணெய் விலைகள், உலகளாவிய உணவு விநியோகங்கள் மீதான அழுத்தமானது, உலகில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ஓர் சுமையை உண்டாக்குகிறது. உக்ரைன் மீதான இந்த தாக்குதலின் மூலம், சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை ரஷ்யா கவலையில் ஆழ்த்தியுள்ளது" எனக் கூறினார்.

மேலும், ``ஒருவருக்கொருவர் எதிரெதிராகப் போர் செய்வதன் மூலம் அல்லாமல், பொருளாதார வளர்ச்சியை ஒன்றாகச் சாத்தியமாக்குவதன் மூலம், நாங்கள் ஒரு சிறந்த எதிர்காலத்தை அடைய விரும்புகிறோம்" என மோடியுடனான பேச்சுவார்த்தையில் விவாதித்ததாக ஜெர்மனி ஓலாஃப் ஸ்கால்ஸ் கூறியிருந்தார்.



from Latest News https://ift.tt/k71STDn

Post a Comment

0 Comments