ஆரணி: ஃபுரூட் மிக்ஸ் குடித்த தொழிலாளிகளுக்கு வாந்தி, மயக்கம் - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள மலையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த குமரேசன் என்பவரது நிலத்தில், அதே பகுதியை சேர்ந்த சிறார்கள், மஞ்சுளா, சாந்தி உள்ளிட்ட 24 கூலித் தொழிலாளிகள் நேற்று முந்தினம்(02.05.2022) வயல்வெளி வேலையில் ஈடுபட்டுள்ளனர். மதிய நேரத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததினால், களம்பூர் பகுதியிலுள்ள ஒரு ஜூஸ் கடையிலிருந்து ஃபுரூட் மிக்ஸ் வாங்கி வந்து அனைத்து கூலித் தொழிலாளிகளுக்கும் அருந்த கொடுத்துள்ளார் குமரேசன்.

ஆரணி

பின், வேலையை முடித்து வீட்டிற்கு சென்ற ஒரு சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர்கள், மலையாம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று காலை மீண்டும் வேலைக்கு சென்றவர்களுக்கு வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. உடனே அவர்களும் மலையாம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறுவர்கள் உட்பட மொத்தம் 18 பேரும் ஒரே மாதிரியான காரணங்களால் தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டதோடு, குறிப்பிட்ட குளிர் பானத்தை அருந்தியதாக தெரிவித்துள்ளனர். பின், 18 பேரும் மேல்சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் கூலித் தொழிலாளர்கள்

ஆரணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் களம்பூர் காவல்துறையினர், ஜூஸ் கடை உரிமையாளரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



from Latest News https://ift.tt/CI6cQmU

Post a Comment

0 Comments