``தமிழ்நாட்டின் மொழி, பாரம்பரியத்தை மறைத்துவிடலாம் என்ற பாஜக எண்ணம் பலிக்காது" - கனிமொழி எம்.பி

ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க மகளிரணி அமைப்பாளர் தமிழ்ச்செல்வி மகன் இளவரசனின் திருமணம் நேற்று நடைபெற்றது. கமுதி அபிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவில் தி.மு.க மகளிரணி செயலாளரும், எம்.பி-யுமான கனிமொழி கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய கனிமொழி எம்.பி., ``ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க மகளிரணி அமைப்பாளர் தமிழ்ச்செல்வி தற்போது கட்சியில் சிறப்பாக பணியாற்றி வருகிறார். இந்த திருமணவிழா தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி வருவதைப் போல திராவிட மாடல் திருமணம். தி.மு.கவை விமர்சனம் செய்பவர்கள் குடும்ப ஆட்சி நடத்துவதாக குற்றம்சாட்டி வருகின்றனர். ஒருமுறை முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் உங்கள் குடும்பம் என்றால் என்ன? எனக் கேள்வி எழுப்பினர்.

திருமண விழாவில் பேசிய கனிமொழி

அதற்கு, என்னுடைய குடும்பம் என்பது ஒரு புகைப்படத்துடன் முடிந்து விடாது. எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ, அத்தனை பேரும் எனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றார். அதன் காரணமாக தான் கருணாநிதி உங்களை அழைக்கும் போது உடன்பிறப்பே என்று குறிப்பிட்டார். மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற முதல் நாளிலேயே பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டத்தை அறிவித்தார். அந்த அளவிற்கு தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டின் உரிமைகளை, மொழியை, பாரம்பரியத்தை மறைத்துவிடலாம் என்ற பா.ஜ.க எண்ணம் பலிக்காது. ஆனால் அவற்றையெல்லாம் எதிர்த்து நின்று கேள்வி கேட்கும் வகையில் சுயமரியாதை ஆட்சியாக தி.மு.க ஆட்சி நடந்து வருகிறது. இது திராவிட மாடல் ஆட்சி.

பெரும்பான்மை மக்கள், சிறும்பான்மை மக்கள் என அனைவரது கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்கக் கூடியது இந்த ஆட்சி. எந்தவொரு கலவரம், பிரச்னையாக இருந்தாலும் முதலில் பாதிக்கப்படுவது பெண்கள் தான், அடுத்தது குழந்தைகள். அது மாதிரி இடங்களில் அமைதியும் இருக்காது. முன்னேற்றமும் இருக்காது. ஆனால் தமிழ்நாடு அனைவருக்கும் முன்மாதிரி ஆட்சியாக இருக்கிறது என்றால் அதற்கு திராவிட மாடல் ஆட்சி தான் காரணம். இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் நமது அரசின் செயல்பாடுகள் இருக்கிறது” எனக் கூறினர்.



from Latest News https://ift.tt/KczN5Dk

Post a Comment

0 Comments