`குட்கா உபயோகத்தை ஊக்கப்படுத்துகின்றனர்’ - அமிதாப்பச்சன், ஷாருக்கானுக்கு எதிராக சமூக ஆர்வலர் வழக்கு

நடிகர் அமிதாப்பச்சன், அஜய் தேவ்கன், ஷாருக்கான் ஆகியோர் குட்கா, பான் மசாலா விளம்பரங்களில் நடித்திருந்தனர். இதற்கு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து இனிமேல் குட்கா, பான்மசாலா விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று அமிதாப்பச்சன் தெரிவித்தார். அதோடு பான்மசாலா நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் ரத்து செய்வதாக அறிவித்தார். ஆனால் அஜய் தேவ்கன் விளம்பரங்களில் நடிப்பது எனது தனிப்பட்ட உரிமை என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் பீகார் மாநிலம் முஜாப்பர்பூரை சேர்ந்த தமன்னா ஹஸ்மி என்ற சமூக ஆர்வலர், நடிகர் அமிதாப்பச்சன், ஷாருக்கான், அஜய் தேவ்கன் ஆகியோருக்கு எதிராக உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மூவரும் விளம்பரங்கள் மூலம் குட்கா, புகையிலை பொருட்களின் பயன்பாட்டை மக்களிடம் ஊக்கப்படுத்துகின்றனர். அவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஷாருக்கான்

இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது. அமிதாப்பச்சன் உட்பட மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்திருக்கும் தமன்னா பிரபலங்களுக்கு எதிராக வழக்கு தொடருவது முதல் முறை அல்ல. இதற்கு முன்பு ரன்வீர் சிங்கிற்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்திருக்கிறார். ரன்வீர் சிங் பிரபலமானவர் என்ற தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் தொடர்பான விளம்பரத்தில் நடித்துள்ளார் என்று கூறி தனது புகாரில் குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடதக்கது!



from Latest News https://ift.tt/TmldpwF

Post a Comment

0 Comments