``பல்கலைக்கழகங்கள் கருத்தியல் மோதலுக்கான இடமாக மாறக்கூடாது'' - உள்துறை அமைச்சர் அமித் ஷா

டெல்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கின் தொடக்க விழாவில் அமித் ஷா கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அமித் ஷா , ``பல்கலைக்கழகங்கள் கருத்துப் பரிமாற்றத்திற்கான களமாக மாற வேண்டுமே தவிர, கருத்தியல் மோதலுக்கான இடமாக மாறக்கூடாது. கருத்துக்கள் மற்றும் விவாதங்கள் மூலம் ஒரு சித்தாந்தம் முன்னேறுகிறது. இளைஞர்கள் தாங்கள் நாட்டுக்கு செய்ய வேண்டிய கடமைகளை புரிந்து செயல்பட வேண்டும். இந்தியா அமைதியை வணங்குகிறது. அமைதியை விரும்புகிறது.

அமித் ஷா

இந்தியா உலகில் உள்ள அனைத்து நாடுகளுடனும் நல்லுறவைக் கொண்டுள்ளது. இந்தியாவுக்கென ஒரு பாதுகாப்புக் கொள்கை இருந்ததில்லை. அப்படியே இருந்திருந்தாலும் அது வெளியுறவுக் கொள்கையின் நிழலாகவே இருந்திருக்கும். கடந்த 2014- ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா பல்வேறு விஷயங்களை சாதித்தது. புதிய கல்விக் கொள்கை பாராட்டத்தக்கது. மேலும் அனைவராலும் வரவேற்கப்பட்ட அந்த கொள்கையை யாரும் எதிர்க்கவில்லை'' என்றார்.



from Latest News https://ift.tt/KcH2bXt

Post a Comment

0 Comments