பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள காவல்துறையின் புலனாய்வு பிரிவு தலைமையகத்தில் ராக்கெட் மூலம் செலுத்தப்படும் கையெறி குண்டு வீசப்பட்டது. அதனால், காவல் நிலையத்தின் ஜன்னல்கள் உடைந்து சிதறியது. எனினும் இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இச்சம்பவத்தைத் தொடர்ந்து மொஹாலி காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “எஸ்.ஏ.எஸ் நகர், செக்டர் 77-ல் உள்ள பஞ்சாப் போலீஸ் உளவுத்துறை தலைமையகத்தில் இரவு 7.45 மணியளவில் சிறிய குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதனால் சேதம் ஏதும் ஏற்படவில்லை. உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் குழுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன” எனக் குறிப்பிட்டிருந்தது.
ட்ரோன்கள் வழியாக அதிக அளவில் வெடிபொருட்கள், ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களின் வருகை தற்போது பஞ்சாபில் அதிகரித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த குண்டுவெடிப்பு மீண்டும் பாதுகாப்பு அச்சத்தைப் பஞ்சாபில் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விசாரணையில் இரண்டு சந்தேக நபர்கள் வெள்ளை நிற ஸ்விஃப்ட் டிசையர் காரில், உளவுத்துறை அலுவலக கட்டடத்திலிருந்து சுமார் 80 மீட்டர் தொலைவிலிருந்து ஆர்.பி.ஜி-யை ஏவினார்கள் என்று தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், காலிஸ்தானி அமைப்பான Sikhs for Justice (SFJ)-யின் பொது ஆலோசகர் குர்பத்வந்த் சிங், "இந்த கையெறி குண்டுத் தாக்குதல் சிம்லா காவல்துறை தலைமையகத்திலும் நடந்திருக்க கூடும்" என்று ஆடியோ செய்தியில் ஹிமாச்சல் முதல்வர் ஜெய்ராம் தாக்கூரை எச்சரித்துள்ளது தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.
from Latest News https://ift.tt/vqK2yuH
0 Comments