Doctor Vikatan: வாகனம் ஓட்டும்போது ஏற்படும் நெஞ்சுவலி; இதற்கான முதலுதவி என்ன?

சாத்தான்குளத்தைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு பேருந்து ஓட்டிக் கொண்டிருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், பயணிகள் நலனுக்காக நெஞ்சுவலியைப் பொறுத்துக்கொண்டு அவர்களை பத்திரமாக இறக்கிவிட்ட பிறகு மருத்துவமனைக்குச் சென்ற அவர் உயிரிழந்ததாகவும் சமீபத்தில் ஒரு செய்தியைப் பார்த்தோம். அடிக்கடி இதுபோன்ற நிகழ்வுகளைக் கேள்விப்படுகிறோம். இதுபோன்ற நிலையில் பெரும்பாலும் இவர்களைக் காப்பாற்ற முடியாமல் போகிறது. இந்நிலையில் உடனிருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?

- ரகுராம் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்.

``இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த ஓட்டுநரின் மனிதாபிமானத்தைப் பாராட்டியே ஆக வேண்டும். அதே நேரம் அதிலிருந்த ஆபத்தை உணராத அவரது அறியாமையையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. வலியைப் பொறுத்துக்கொண்டு பேருந்தை ஓட்டியவர், நிலைதடுமாறியிருந்தால் எத்தனை உயிர்கள் ஆபத்தைச் சந்தித்திருக்கும் என்பதை அவர் யோசிக்கவில்லை.

அடிக்கடி இது போன்ற நிகழ்வுகளைச் செய்திகளில் பார்க்கிறோம். தனியே வாகனம் ஓட்டும்போது யாராவது நெஞ்சுவலியை உணர்ந்தால் உடனடியாக வாகனத்தை நிறுத்திவிட்டு அவசர உதவியை நாடுவதுதான் புத்திசாலித்தனமானது.

Heart Attack

அதுவே வாகனத்தில் வேறு நபர்கள் இருக்கிறார்கள் என்றால் நெஞ்சுலிக்குள்ளான நபரை வாகனம் ஓட்ட வேண்டாம் என்று சொல்லி, டிரைவிங் தெரிந்த வேறொரு நபர் வாகனத்தை ஓட்டிக்கொண்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு விரைய வேண்டும். நெஞ்சுவலிக்குள்ளான நபருக்கு உடனடியாக 325 மில்லிகிராம் அளவுள்ள ஆஸ்பிரின் மாத்திரையைக் கொடுக்க வேண்டும். தாமதமில்லாமல் மருத்துவமனைக்குச் செல்வதுதான் இதில் பிரதானம்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


from Latest News https://ift.tt/WtuGsk1

Post a Comment

0 Comments