மும்பை காவல்துறை தங்களது சமூக வலைதளங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காணொலி, மீம்கள் போன்றவற்றை பகிர்வது வழக்கம். அதுமட்டுமில்லாமல் சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்கு பிரத்யேகமாக மீம்கள் பதிவிடுவது, சமூக வலைதளப் பயனர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பது போன்ற செயல்பாடுகளின் மூலம் மக்களை கவரும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.
அதைத் தொடர்ந்து தற்போது முழுக்க முழுக்க காவல் அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட 'காக்கி ஸ்டுடியோ' என்னும் இசைக்குழு மூலம் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Aisa Mauka Phir Kaha Milega!#KhakiStudios presents to you a melody to make your evenings (and mornings) pleasant!#MusicalMonday #MumbaiPoliceBandhttps://t.co/6cE6KtDQyF
— Mumbai Police (@MumbaiPolice) May 9, 2022
இதில் பல்வேறு இசைக்கருவிகளைப் பயன்படுத்தி ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டின் பிரபலப் பாடல்களின் பின்னணி இசையை வாசித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அழுத்தம் நிறைந்த காவல்துறைப் பணியில் நேரம் ஒதுக்கி இவ்வாறு காவல்துறையினரின் தனிப்பட்டத் திறமைகளை வெளிக்கொணரும் பணியில் ஈடுபட்டு வரும் மும்பை காவல்துறையைப் பாராட்டி வருகின்றனர் சமூக வலைதள பயனர்கள்.
from Latest News https://ift.tt/R7ZOvbx
0 Comments