உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகமானது, நுகர்வோர் உரிமை மீறல்களைத் தடுக்கும் விதமாக, ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரன்ட்களில் சேவைக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மத்திய அமைச்சகத்தின், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்(சி.சி.பி.ஏ) வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரன்டுகள் பின்பற்றவேண்டிய வழிகாட்டுதல்கள் என்னென்ன என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி, `ஹோட்டல் அல்லது ரெஸ்டாரண்ட்கள் எந்தவொரு பெயரிலும் சேவைக்கட்டணத்தை வசூலிக்கக்கூடாது.
நுகர்வோரையும் சேவைக் கட்டணத்தைச் செலுத்துமாறு கட்டாயப்படுத்தக்கூடாது. சேவைக்கட்டணம் செலுத்துவதென்பது, நுகர்வோரின் விருப்பம் என்பதை அவர்களுக்குத் தெளிவாகக் கூற வேண்டும். மேலும் உணவுக் கட்டணத்துடன், ஜி.எஸ்.டி வரியும் விதிப்பதன் மூலம், சேவைக் கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது" என வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் எங்கேனும் சேவைக்கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால், தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைன் எண்ணான 1915 என்ற எண்ணைத் தொடர்புகொண்டும், மின்னஞ்சல் மூலமும் புகாரளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
from Latest News https://ift.tt/tSuygba
0 Comments