அதிகரிக்கும் கொரோனா பரவல்; ஆன்லைனில் நடத்தப்படுகிறதா அதிமுக பொதுக்குழு கூட்டம்?!

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த மாதம் சலசலப்புக்கு பஞ்சமில்லாமல் அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடந்து முடிந்தது. கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 'ஒற்றைத் தலைமை' விவாதத்தை கிளப்பியதையடுத்து, ஓ.பி.எஸ் அவர் ஆதரவாளர்களுடன் பாதியிலேயே வெளியேறினார். அதைத் தொடர்ந்து ஓ.பி.எஸ் இந்த விவகாரம் தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை முடுக்கி விட்டார், எடப்பாடி தரப்பும் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

இந்த மாதம் 11-ம் தேதி மீண்டும் அதே மண்டபத்தில் அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அதற்கான பணிகளை இ.பி.எஸ் தரப்பு மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படும் நிலையில், அ.தி.மு.க பொதுக்குழு திட்டமிட்டபடி 11-ம் தேதி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

கொரோனா வைரஸ்

ஒருவேளை தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாகப் பொதுக்குழுக் கூட்டம் நடத்த அரசு அனுமதியளிக்காத பட்சத்தில், பொதுக்குழுக் கூட்டத்தை ஆன்லைனில் நடத்துவது தொடர்பாக அ.தி.மு.க தலைமை ஆலோசனை மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆனால், அ.தி.மு.க தரப்பிலிருந்து இது தொடர்பாக எந்தவித தகவலும் இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



from Latest News https://ift.tt/xtfgyMl

Post a Comment

0 Comments