"கனத்த இதயத்துடன்தான் முதல்வர் பதவியை ஷிண்டேயிக்கு விட்டுக்கொடுத்தோம்!" - மகாராஷ்டிரா பாஜக தலைவர்

மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த ஆட்சி கவிழ்ப்பிற்கு பிறகு பாஜக-வின் தேவேந்திர பட்நவிஸ் முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றார். இதனால் ஆட்சியில் பங்கேற்க தேவேந்திர பட்நவிஸ் மறுத்தார். கட்சித் தலைமை அவரைக் கட்டாயப்படுத்தி துணை முதல்வர் பதவியை ஏற்கவைத்தது. இந்த நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், "ஸ்திரத்தன்மையை கொடுக்கூடிய தலைவர் எங்களுக்குத் தேவையாக இருந்தது. கட்சித் தலைமையும், தேவேந்திர பட்நவிஸும் ஏக்நாத் ஷிண்டேயை முதல்வராக்க முடிவு செய்தபோது கனத்த இதயத்துடன்தான் ஏற்றுக்கொண்டோம்.

ஏக்நாத் ஷிண்டே, பட்நவிஸ்

இதில் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை. ஆனால் ஏற்றுக்கொண்டோம்" என்று தெரிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த தேவேந்திர பட்நவிஸ், "ஏக்நாத் ஷிண்டேதான் எங்களது தலைவர். ஏக்நாத் ஷிண்டேயை முதல்வராக்கும் முடிவு பலருக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் இம்முடிவு திடீரென எடுக்கப்படவில்லை. அனைவரும் இணைந்துதான் முடிவு எடுத்தோம். சந்திரகாந்த் பாட்டீல் கட்சி தொண்டர்களின் மனநிலையை பிரதிபலித்துள்ளார். அதற்காக நாங்கள் ஷிண்டேயை ஏற்றுக்கொள்ளவில்லை என்று அர்த்தம் கிடையாது. ஏக்நாத் ஷிண்டே பல எம்.எல்.ஏ-க்களுன் வந்துள்ளார். அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பு கொடுக்கவேண்டும் என்பதற்காகத்தான் முதல்வர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அதற்காக நாங்கள் அதிகாரத்திற்கு அலையவில்லை. மகாராஷ்டிராவின் நலனுக்கு ஆட்சிமாற்றம் தேவையாக இருந்தது. 2019-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு எந்த உத்தரவாதமும் கொடுக்கப்படவில்லை. சிவசேனா ஏற்கெனவே தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்து இருந்தது. உத்தவ் தாக்கரேயுடன் பேச பல முறை முயன்றேன். ஆனால் உத்தவ் தாக்கரே போன் எடுக்கவே இல்லை. உத்தவ் தாக்கரே என்றைக்கு எங்களது முதுகில் குத்தினாரோ அன்றே அவரது முடிவு எழுதப்பட்டுவிட்டது. பால் தாக்கரேயின் உண்மையான கொள்கையை பின்பற்றுபவர்கள் எங்களுடன் இருக்கின்றனர்" என்று தெரிவித்தார்.



from Latest News https://ift.tt/XwCnTMi

Post a Comment

0 Comments