சென்னை பள்ளிக்கரணை பகுதியில் உள்ள மணிமேகலை இரண்டாவது தெருவில் புதிதாக ஓர் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடத்தின் கட்டுமான பணிகளை வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அங்கேயே தங்கிச் செய்துவருகிறார்கள். இந்த நிலையில், கடந்த ஞாயிறு இரவு பள்ளிக்கரணையில் கட்டடப்பணி செய்துவரும் வடமாநில இளைஞர் மகேஷ் என்பவர், மேடவாக்கத்தில் கட்டுமான பணி செய்யும் அமர் மற்றும் பிஷால் ஆகிய இருவரையும் பள்ளிக்கரணை அழைத்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள்

இந்த மூவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது, அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஒருவர் மாற்றி மற்றொருவர் தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த அமர் மற்றும் பிஷால், மேடவாக்கத்திலிருந்து ஆட்களை வரவழைத்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மகேஷை கடுமையாகத் தாக்கியுள்ளனர். கட்டையால் தலையில் தாக்கப்பட்டதில் மகேஷுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள்

இந்த சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த பள்ளிக்கரணை காவல்துறையினர் மகேஷை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மகேஷ் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், மோண்டா பாஸ்கர் (18), டிப்பாஸ்கர் (18), பிஷால் (20), ரேகல் ஹால்டர் (20), அமர் பாஸ்கர் (21), மஞ்சித் (22), கான் (32) ஆகிய ஏழு பேரைக் கைது செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.



from Latest News https://ift.tt/BsGX2lN