``ஒரு நல்ல மனிதர் வெளியேறுகிறார்..!" - வெங்கைய நாயுடு குறித்து காங்கிரஸ் தலைவர் ட்வீட்

துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 6-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க கூட்டணி வேட்பாளராக மேற்கு வங்க கவர்னர் ஜெக்தீப் தங்கர் போட்டியிடவுள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தல், துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

வெங்கைய நாயுடு 1988-ம் ஆண்டு ஆந்திர மாநில பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டார். 1998-ம் ஆண்டு ராஜ்ய சபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து 2004, 2010 என மறுபடியும் தேர்வு செய்யப்பட்டார். இது தவிர பல்வேறு பொறுப்புகளை வகித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், வெங்கைய நாயுடு குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ``வெங்கைய நாயுடுவின் நகைச்சுவை மற்றும் புத்திசாலித்தனம் தவறவிடப்படும். பல சமயங்களில் அவர் எதிர்க்கட்சியினர் அனைவரையும் கிளர்ந்தெழச் செய்தார். ஆனால் இறுதியில் ஒரு நல்ல மனிதர் வெளியேறுகிறார். அவர் ஓய்வு பெற்றிருக்கலாம். ஆனால், அவர் சோர்வடைய மாட்டார் என எனக்கு தெரியும்’’ என நெகிழ்ச்சியாக பதிவிட்டிருக்கிறார்.



from Latest News https://ift.tt/o1YVXax

Post a Comment

0 Comments