``திட்டமிடல் இல்லை... 70 டிகிரி குறுகல்!" - கோவை மேம்பாலம் வடிவமைப்பு குறித்து செந்தில் பாலாஜி

கோவை, திருச்சி சாலையில் ரூ.253 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மேம்பாலம், கடந்த மாதம் திறக்கப்பட்டது. ஆனால், ஒரு மாதத்துக்குள் மூன்று பேர் அந்த பாலத்தில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்தனர். இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி அந்த மேம்பாலத்தை ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

கோவை மேம்பாலம்

``சரியான திட்டமிடல் இல்லாமல், வழிமுறைகள் இல்லாமல் பாலம் கட்டியதால் தற்போது 3 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். தொடர்ந்து விபத்துகள் நடைபெறுவதால் மேம்பாலத்தில் வேகத்தடை அமைத்தல், 40 கி.மீ வேகத்துக்கு மேல் செல்லக் கூடாது என்று பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

வாகனங்களைக் கண்காணிக்க சிசிடிவி கேமரா பொருத்துவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவையெல்லாமே இடைக்கால ஏற்பாடுகள்தான். மேம்பாலத்தின் இரு பக்கங்களிலும், தனியார் நிலத்தை கையகப்படுத்தி வடிவமைக்கும் சூழ்நிலையை தவிர்த்துள்ளனர். பாலம் நேராக இல்லாமல் 70 டிகிரிக்கு குறுகலாக திரும்பக்கூடிய அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேம்பாலத்தில் செந்தில் பாலாஜி, அதிகாரிகள் ஆய்வு

இந்த வடிவமைப்பு மாற்றியமைப்பதற்காக, மாவட்ட ஆட்சியர் தலைமையில் காவல்துறை, போக்குவரத்துத்துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை அடங்கிய குழு அமைக்கப்படும். அந்தக் குழுவின் அறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலத்தில் முழுமையாக விபத்துகளை தவிர்ப்பதற்காகதான் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேம்பாலத்தில் பக்க சுவரை எழுப்பினாலும், 3 கி.மீ தொலைவுக்கு மேம்பாலம் கட்டிவிட்டு 40 கி.மீ வேகத்தில் செல்லுங்கள் என்று வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த முடியாது. அதேபோல வாலாங்குளத்தில் உபரி நீர் வெளியேறுவதற்கு மூன்று அடியில் இரண்டு குழாய்கள் போடப்பட்டுள்ளன.

கோவை மேம்பாலம்

மழை அதிகம் பெய்யும்போது, உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஊருக்குள் வரும் சூழ்நிலைதான் உள்ளது. திட்டங்களை செயல்படுத்தும்போது, அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்து முறையாக திட்டமிட வேண்டும். அது கடந்த காலங்களில் நடக்கவில்லை.” என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/fJI9lEa

Post a Comment

0 Comments