கச்சநத்தம் மூவர் கொலை வழக்கு: 27 பேர் குற்றவாளிகள்; 3-ம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிப்பு!

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு கோயில் திருவிழா நடந்துகொண்டிருந்த சமயத்தில் ஊருக்குள் புகுந்த கும்பல், பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களின் வீடுகளை சேதப்படுத்தியும், அவர்கள் மீது அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் கடுமையாக தாக்கியதில் ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய மூவர் கொலை செய்யப்பட்டனர்.

கச்சநத்தம்

பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்த படுகொலை சம்பவத்துக்கு நியாயம் கேட்டு பல்வேறு அமைப்புகள் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தின.

இந்த வழக்கில் சுமன், அருண்குமார், சந்திரக்குமார், அக்னிராஜ், ராஜேஷ் உள்ளிட்ட 33 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்த காலத்தில் குற்றம்சாட்டப்பட்ட இருவர் உயிரிழந்தனர்.

குற்றவாளிகள் நீதிமன்றம் வந்தபோது

சிவகங்கை எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் விசாரணைகள் முடிந்த நிலையில், நேற்று மாலை நீதிபதி முத்துக்குமரன் இவ்வழக்கில் 27 பேர் குற்றாவாளிகள் என அறிவித்தார்.

குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் நாளை (3-ம் தேதி) வழங்கப்படுவதாக அறிவித்து என தீர்ப்பை ஒத்தி வைத்தார்.

கொலை செய்யப்பட்டவர்கள்

இந்த தீர்ப்பை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/teghGzS

Post a Comment

0 Comments