கர்நாடகா: லாரி - ஜீப் மோதி கோர விபத்து - 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் பலியான சோகம்

கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தில் இன்று அதிகாலை தினசரி கூலி தொழிலாளர்கள் தங்களின் அன்றாட வேலைக்காக பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென சிரா அருகே தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 4 மணி அளவில் லாரி மீது ஜீப் மோதி இருக்கிறது. இந்த கோர சம்பவத்தில் மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் 11 பேர் காயமடைந்தனர் என கூறப்படுகிறது.

கர்நாடகாவில் விபத்து

இதையடுத்து காயமடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணமும், காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.



from Latest News https://ift.tt/bBtN4Zr

Post a Comment

0 Comments